பாகிஸ்தானில் கோட்கி பகுதியில் இன்று காலை இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு பாகிஸ்தானில் உள்ள கோட்கி பகுதியில் இன்று காலை சையது எனும் விரைவு ரயிலும் மில்லட் எனும் விரைவு ரயிலும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்களில் இருந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விரைவு ரயில்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.