பள்ளத்தில் விழுந்த காருக்குள் டிக் டாக்! 16 வயது இளம் பெண்களின் அட்டகாசம்!

தற்போதுள்ள உலகில் பலரால் ஈர்க்கப்பட்டு அதிகம் உபயோகப்படுத்தும் செயலி என்றால் அது டிக் டாக் செயலி என கூறும் அளவிற்கு அந்த செயலி மிக பிரபலம். அதிலும் இளைஞர்கள்

தற்போதுள்ள உலகில் பலரால் ஈர்க்கப்பட்டு அதிகம் உபயோகப்படுத்தும் செயலி என்றால் அது டிக் டாக் செயலி என கூறும் அளவிற்கு அந்த செயலி மிக பிரபலம். அதிலும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பலர் இதற்கு அடிமையாகும் அளவிற்கு மூழ்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 16 வயது நிரம்பிய இரு இளம் பெண்கள் தங்கள் காரை ஒட்டி செல்கையில் தடுமாறி ஒரு பள்ளத்தில் விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்பிழைத்தனர்.

unknown node

பிறகு அவர்கள் அவசர உதவிக்கு அழைத்தனர். அவசர உதவி வர தாமதமானது. அதுவரை கார் தலைகீழாக இருந்துள்ளது. அந்த சமயம் தங்களது பதட்டத்தை குறைத்துக்கொள்ள அந்த இரு இளம் பெண்களும் டிக் டாக் செய்து அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது மிக வைரலாக பரவி வருகிறது.

இதற்கு பலர் ஆதரவும் பலர் கார் விபத்தின் போதும் டிக் டாக் செய்துள்ளனர் என கேலியாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.