போர்ப்பயிற்சியில் அர்மேனிய பிரதமரின் மனைவி..!

போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அர்மேனிய பிரதமரின் மனைவி.

போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அர்மேனிய பிரதமரின் மனைவி.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், எல்லைப் பாதுகாப்பை வழங்குவதில் அர்மேனியா இராணுவத்திற்கு உதவும் நோக்கத்தில் அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியனின் மனைவி அன்னா ஹகோபியான் மற்ற 13 பெண்களுடன் இராணுவப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹக்கோபியான், நான் உட்பட 13 பெண்களைக் கொண்ட ஒரு பிரிவு இன்று இராணுவ போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்கு உதவ நாங்கள் புறப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node