கத்தாரில் நடைபெறும் 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கு செல்லும் போலந்து அணிக்கு பாதுகாப்பாக இரு F-16 ஜெட் விமானங்கள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
கத்தாரில் நவ-20 இல் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் போலந்து அணிக்கு பாதுகாப்பாக இரு எஃப்(F)-16 போர் விமானங்கள் செல்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சிலதினங்களுக்கு முன்பாக போலந்து நாட்டில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தற்போது போலந்து கால்பந்து வீரர்களுக்கு பாதுகாப்பு கருதி இரு போர் விமானங்கள் உடன் செல்கின்றன.
unknown node