பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் தனது 16 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற சன்னா மரின் , டிசம்பர் 8 ம் தேதி முதல் பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். பெண் பிரதமர்கள் ஆளும் நாடுகளின் பட்டியலில் சிறப்பாக கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதில் சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தனது 16 ஆண்டு கால காதலரை மணமுடித்துள்ளார்.
பின்லாந்து நாட்டின் பிரதமருக்கான உத்தியயோகப்பூர்வ இல்லத்தில் காதல் கணவரான மார்கஸ் ரெய்கோனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பின்லாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே இரண்டரை வயதில் எம்மா அமலியா மரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இதனை சன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். தற்போது இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
unknown nodeunknown node