அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள யூஜினில் இருக்கும் சர்ச்சில் என்ற உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் பாலியல் கற்பனையை விவரிக்கும் படி கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அந்த கட்டுரையில் உடலுறவை பற்றி வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் அதை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றியும் கூறியுள்ளார்கள்.
அது என்னவென்றால், “காதல் இசை, மெழுகுவர்த்திகள், மசாஜ் எண்ணெய், இறகு, போன்றவை வைத்து “பாலியல் கற்பனை” கொண்டு கட்டுரை எழுதலாம் என பள்ளியின் ஆசிரியர் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த ஆசிரியர் அனுப்பிய மின்னஞ்சலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் “பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, ஒரு கட்டுரை எழுதவேண்டும். இந்தக் கதை ஒரு பாலியல் கற்பனையாகும். இதில் எந்த வகையான உடலுறவு பற்றி வெளிப்படையாக இருக்கக் கூடாது. உங்கள் கதையில் பயன்படுத்த 3 பொருட்களை (காதல் இசை, மெழுகுவர்த்திகள், மசாஜ் எண்ணெய், இறகு, சுவையூட்டப்பட்ட சிரப் போன்றவை) தேர்வு செய்யவேண்டும். உடலுறவு கொள்ளாமலேயே நீங்கள் அன்பான உடல் பாசத்தைக் காட்டவும் பெறவும் முடியும் என்பதை உங்கள் கதை காட்ட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த மின்னஞ்சலின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் பெற்றோர் ஒருவர் இது மிகவும் கேவலமாக இருக்கிறது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.