சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது – பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தகவல்!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவங்களில் தமிழக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல் . கடந்த ஒய்வு பெற்ற இவர் நீதிமன்ற உத்தரவு மூலம் சிலை கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழக கோவில்களில் காணாமல் போன ஏராளமான சிலைகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போன வழக்குகள் விசாரணை நடந்து தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜரான பொன்.மாணிக்கவேல் சிலைகள் கடத்தலில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, உரிய ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025