சட்டப்பேரவையில் அம்பேத்கர் கருத்தை சுட்டி காட்டிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி.! 

ளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஜி.கே.வாசன் பேச்சு.

ளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஜி.கே.வாசன் பேச்சு.

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதன் மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை :

அதன் பிறகு இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி,  தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.

அண்ணல் அம்பேத்கர் :

அடுத்து அவர் பேசுகையில், ஆளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. இது ஒரு அலங்கார பதவி மட்டுமே. என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என பேசினார்.

சட்ட மசோதா :

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், கூடங்குளம், அணு உலை, ஸ்டெர்லைட் பிரச்சனை என்று தேவையற்ற பிரச்னைகளை பற்றி பேசி தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநரின் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். ஒரு சட்ட மசோதாவை காலம் தாழ்த்தி திருப்பி அனுப்புகிறார். மீண்டும் ஒருமனதாக ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனுப்பினால் அதனையும் கையெழுத்திடாமல் வைத்துள்ளார் என ஆளுநர் செயல்பாடு குறித்த தீர்மானம் குறித்து ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசினார்.