அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகம் வந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்றும் நாளையும் அதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய, 10 வருடம் கட்சி உறுப்பினராகவும், 5 வருடம் கட்சி பதவியிலும் இருக்க வேண்டும். அதே போல 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாகவேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகம் வந்துள்ளார். தேர்தல் அலுவலர்களாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.