டெல்லி பயணம் நிறைவு.! தமிழகம் வந்தடைந்தார் ஆளுநர் ரவி.!

டெல்லி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நேற்று இரவு ஆளுனர் ரவி தமிழகம் வந்தடைந்தார்.

Tamilnadu Governor RN Ravi

டெல்லி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நேற்று இரவு ஆளுனர் ரவி தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த சமயத்தில் ஆளுநர் ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசித்தார்.

கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ரவி. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து ஆலோசித்தார். இந்த ஒரு வார பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு விமானம் மூலம் தமிழகம் திரும்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஏற்கனவே, செந்தில் பாலாஜியை தமிழக அரசு அமைச்சரவையில் நீட்டிக்கப்பட்ட விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்குகள் விசாரிக்காதது குறித்து தமிழக அரசு கடிதம் அனுப்பிய விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீண்டு கொண்டு இருக்கிறது.