அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு..!

AIADMK MLAs have filed a petition at the Chennai Police Commissioner's Office seeking permission to hold a meeting.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முடிவு எட்டப்படாததால் நாளை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதால் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு செய்ய நாளை காலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.