திமுக ஆட்சிக்கு வந்து அதன் பிறகு ஆரம்பிக்க பட்ட கலைஞர் நூலகம் திறக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதுதான் செயல்படும் அரசுக்கும், செயல்படாத அரசுக்கும் உள்ள வித்தியாசம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், சுமார் 72 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், அவர்களுக்கான 180கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது குறித்து பேசியிருப்பார்.
அவர் கூறுகையில், 2021 தேர்தலின் போது செங்கலை வைத்து தான் பிரச்சாரம் செய்தேன். அடுத்து 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போதும் அதே செங்கலை கொண்டு தான் பேச உள்ளேன். இந்த பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ்க்காக மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து அதன் பிறகு ஆரம்பிக்க பட்ட கலைஞர் நூலகம் திறக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. இதுதான் செயல்படும் அரசுக்கும், செயல்படாத அரசுக்கும் உள்ள வித்தியாசம். என கூறினார் .
மேலும், விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்குங்கள். அதற்கான நிதியை ஒதுக்குங்கள் . மதுரை மக்கள் அனைவரும் கையில் செங்கலை ஏந்தும் நிலைக்கு கொண்டு வந்துவிடாதீர்கள். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் பேசினார்.