பாஜக போராட்டம்.. மிரட்டல் பேச்சு.! மன்னிப்பு கோரிய முன்னாள் ராணுவ அதிகாரி.!

பாஜக போராட்டத்தின் போது மிரட்டல் தொனியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

பாஜக போராட்டத்தின் போது மிரட்டல் தொனியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

கிருஷ்ணகிரியில் இரு தரப்பு மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் மறைவுக்கு எதிராக, பாஜக சார்பில் கடந்த பிப்ரவரி 21இல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ராணுவ வீரரார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கர்னலின் பேச்சு :

அதில் பேசிய, முன்னாள் கர்னல் பாண்டியன் , தமிழக அரசை மிரட்டும் தொனியில் வெடிகுண்டு வைக்க தெரியும், துப்பாக்கியால் சுடத்தெரியும், எங்களை (ராணுவ வீரர்கள்) சீண்டினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றெல்லாம் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

வழக்குப்பதிவு :

மேலும், திருவெல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் கர்னல் பாண்டியன் மீது  இரு தரப்பு இடையில் மோதல் ஏற்படுத்துவது போல பேசுவது , பொது அமைதி சீர்குலையும் வண்ணம் பேசுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்ஜாமீன் – நிபந்தனை :

இந்த வழக்குகளை தொடர்ந்து முன்னாள் கர்னல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். மேலும், தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியிருந்தார். இதனை ஏற்று அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், திருவெல்லிக்கேணி காவல்நிலைத்த்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.