கோவையில் தனியார்பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் +1 மாணவர் மிதுன் அணிந்திருந்த சீருடை முறையாக இல்லை என கூறி இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் கண்மூடித் தனமாக அடித்ததால் மாணவர் மிதுன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் கோவையில் தனியார்பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் நலன் பேணவும், ஆசிரியர் மாணவர் நல்லுறவு பேணவும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
unknown node