என் போன் நம்பரை கசியவிட்ட பாஜகவினர்... 500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Actor Siddharth tweeted that more than 500 sexual assault and death threats are coming to me and my family.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன என நடிகர் சித்தார்த் ட்வீட்.

நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக  விமர்சனங்களை முன் வைத்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுபோல, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என  குறிப்பிட்டு அந்த பதிவினை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை போன்ற  மிரட்டல்கள் போனில் வருவதாக கூறியுள்ளார். மேலும், தன்னை மிரட்டியவர்களின் கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றும் தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

unknown node