டெல்லி மாநகராட்சி இடைதேர்தலில் பாஜக படுதோல்வி..!

The Delhi corporation has embraced the BJP's defeat in the by-elections.

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை தழுவியுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் உள்ள செளகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக் , திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதில், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.  இந்த 5 இடங்களில் செளகான் பங்கர் வார்டில் அதிக வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றியை வசமாக்கியது. மீதமுள்ள ரோகினி, ஷாலிமர்பாக் ,திரிலோக்புரி, கல்யாணபுரி ஆகிய வார்டில் ஆம்ஆத்மி வெற்றியை பதிவு செய்தது.

பல மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துவந்த பாஜகவிற்கு டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது.