மேற்கு வங்கம் அரம்பாக்கில் பாஜக கட்சி அலுவலகம் தீ வைப்பு.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அரபாக்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தலைவர்கள் பலர் தங்களது தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாஜக சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் டி.எம்.சி குண்டர்கள் அரம்பாக்கில் உலா பாஜகவின் கட்சி அலுவலகத்தை தீ வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வங்காளம் பாதுகாக்கப்பட வேண்டியது இதுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node