2026இல் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும்.! நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.!

2026இல் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் பேசியுள்ளார்.

Tamilnadu BJP President Annamalai

2026இல் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி தங்கள் சொந்த மாவட்டமாக பாவித்தார். மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கியவர் பிரதமர் மோடி. அதற்கு இணையமைச்சராக எல்.முருகனை நியமித்தார். கடந்த 9 ஆண்டுகளில் எந்தவிதமான துப்பாக்கி சூடும் மீனவர்கள் மீது நடத்தப்படவில்லை எனக்கு ஒரு குறிப்பிட்டு பேசினார்.

மேலும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. இதை கேட்டவுடன் மதுரை எய்ம்ஸ் பற்றி பேசுவார்கள். டில்லியில் உள்ள மதுரை எய்ம்ஸ் போன்று மதுரையின் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 2026 மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு மதுரையில் திறக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்தார்.

அதேபோல், திமுக குறிப்பிட்டபடி மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ததும் அவருக்கு ஐந்து நிமிடத்தில் இதயத்தில் ஐந்து அடைப்பு வருகிறது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து விட்டதாக சரத் பவர் குறிப்பிட்டதும், அடுத்த 10 நாட்களில் 40 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடத்திய அரசியல் திருப்பத்தை பற்றி குறிப்பிட்டார்.

காவிரி ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சொல்லிவிட்டார். இதற்கு திமுக கட்சிகள் என்ன செய்யப் போகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் அதிகமான இடமான தொகுதிகளில் பாஜக வெல்லும். கன்னியாகுமரியில் வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயமாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

2026இல் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும்.! நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.!