தொகுதி பங்கீடு: திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் – கேஎஸ் அழகிரி

Tamil Nadu Congress leader KS Alagiri has said that the second phase of talks will be held with the DMK regarding the distribution of constituencies.

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக, திருப்திகரமாக இருந்தது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.