#Breaking: சட்டமன்றத்தில் பொது சொத்துக்கள் சேதம் – உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

The Supreme Court has condemned the state government's ongoing case seeking permission to withdraw the case against Kerala MLAs.

கேரள எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கேரளா சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, அங்கிருந்த பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது காரணமாக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரிய (சிபிஎம் ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு) மனுவை கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை எம்பி, எம்எல்ஏக்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்துள்ளது.

மேலும், எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய பதவி என்பது எந்தவிதமான தடையும் இல்லாமல், எதற்கும் பயப்படாமல் அவையில் தங்களுக்கான பொதுப் பணியை செய்வதற்காக தானே தவிர இதுபோன்று கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல என நீதிபதிகள் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.