#BREAKING: சசிகலாவிற்கு போஸ்டர் ஒட்டியவர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்..!

Sasikala was expelled from the AIADMK executive party for holding the banner of liberation.

சசிகலா விடுதலைக்கு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிமுக தனது அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சுப்ரமணிய ராஜா (எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.