ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கு !ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க  உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை மிலானி என்பவர் தொடர்ந்தார்.வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக   வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,தேர்தல் ஆணையம், ரவீந்திரநாத் குமார் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.