ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற தொண்டர் விரட்டியடிப்பு ....!

AIADMK volunteer who went to nominate for the post of coordinator has been expelled.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க சென்ற அதிமுக தொண்டர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலரும் வந்துள்ளனர். அப்பொழுது அதிமுக தொண்டர் ஒருவர் ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கேட்டு சென்றுள்ளார். ஆனால், அவரை அங்கு இருந்த அதிமுக தொண்டர்கள் அடித்து விரட்டி உள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமையிடம் கேட்கும்பொழுது அவர் தனியாக வந்ததால் தான் அவ்வாறு நடத்தப்பட்டதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் பொழுது அவர்களை பரிந்துரை செய்ய இருவராவது உடனிருக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.