வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அரசால் செயல்பட்டு வரும் திட்டங்களை அவ்வப்போது ஆய்வு செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘கள ஆய்வில் முதல்வர்’ எனும் திட்டத்தின் கீழ் இன்று ஆய்வை மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது காலை சிற்றுண்டியை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார் முதல்வர்.