3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்..!

The award has been given to 3 District Collectors for the best implementation of the Chief Minister's scheme in your constituency.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்றுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் 100 நாட்களை நிறைவு பெறுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதைத்தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார். “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 100 நாட்களில் இரண்டு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின்  சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.