மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் , பணி ஆணையை வழங்கிய முதல்வர் ..!

Chief Minister MK Stalin presented welfare assistance and work orders to the disabled.

மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில்மாற்றுத்திறனாளிகள்நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் மூன்று நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும், ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

இதேபோல மற்ற மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த திட்டமானது தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள ஆட்சியர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.