பாஜகவுக்கு விசா வழங்க மக்கள் தயாராகிவிட்டனர்.! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

பாஜகவுக்கு விசா வழங்க மக்கள் தயாராகிவிட்டனர் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tamilnadu CM MK Stalin

பாஜகவுக்கு விசா வழங்க மக்கள் தயாராகிவிட்டனர் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால் பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தங்கள் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கூட்டணி அமைத்து அதற்கு இந்தியா என பெயர் வைத்து உள்ளனர். பாட்னா, பெங்களூரு என இரண்டு ஆலோசனை கூட்டம் முடிந்தது. இந்த 2 ஆலோசனை கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், பாஜக ஆட்சி 2024 தேர்தலில் அகற்றப்பட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர்களில் மிக முக்கியமானவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் இன்று இது குறித்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்டுவோம் என குறிப்பிட்டு முதல்வர் எழுதிய கடிதம் துவங்குகிறது.

unknown node