உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மூத்த அரசியல் தலைவரான கார்கேவுக்கு பல்வேறு கட்சியினரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .
தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அந்த டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுகையில், மல்லகர்ஜுன கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த கடினமான காலங்களில், மதச்சார்பற்ற நோக்கத்துடன் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நமது மகத்தான தேசத்தை வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான எண்ணங்களுடன் ஒரு வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள் எங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என அந்த பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். .
Wishing you a very Happy Birthday, Thiru @Kharge avare.
Amidst these tough times, your leadership in the efforts to unite like-minded parties for a secular union is truly commendable. Your vast experience and dedication to our nation’s progress inspire us all. May your efforts…
— M.K.Stalin (@mkstalin) July 21, 2023


-300x169.webp&w=3840&q=75)
