மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் 2023 – 2024க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை அவர் தெரிவித்தார். அப்போது மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு ஒரு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காக 60,000 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதை குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பட்ஜெட் பற்றி கருத்து கூறுகையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மத்திய அரசு 89 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தது. ஆனால், இந்த வருடம் மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்படியான மத்திய அரசு நடவடிக்கையானது எளிய மக்களை பட்டினி போட்டி கொல்வதற்கு சமம் என்று அவர் கடுமையாக தனது விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.