தோழர் தா.பாண்டியன் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர வேண்டும் – முக ஸ்டாலின்

Stalin said that Pandian, who is receiving treatment at the hospital, should recover soon.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியன் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

unknown node