வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் – அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தமைக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node