தற்போது, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை மே 24-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை 224 தொகுதிகளை கொண்டுள்ளது.
224 தொகுதிகள் கொண்ட இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது. கர்நாடகா தேர்தலுக்கு 124 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeஅந்த வீடியோவில், நேற்று மண்டியாவில் நடந்த பேரணியின் போது, அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், ரூ.500 நோட்டுகளை மக்கள் மீது வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கர்நாடகாவில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை காங்கிரஸ் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், அதற்கான பணிகளை தீவரமாக முன்னெடுத்து வருகிறது.