கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ்.! 124 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, அமித்ஷாஞ், முன்னாள் முதல்வர் சித்தராமையா என பல்வேறு தலைவர்களும் தங்கள் கட்சிக்கான தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

unknown node

தற்போது காங்கிரஸ் கட்சி தங்கள் தரப்பு முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

unknown node