12 மணிநேர வேலைக்கான சட்ட மசோதா.! காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு.!

12 மணிநேர வேலை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் காட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

12 மணிநேர வேலை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் காட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று தமிழக சட்டப்பேரவையில், தொழிற்சாலை சட்டத்தில் 65ஏ பிரிவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்களின் 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இந்த சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சியினரே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த சட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதேபோல, இந்த சட்டம் எந்த வகையிலும் தொழிலாளர்களை பாதிக்காது என அமைச்சர் கணேசனும் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

இருந்தும், இதன் மீதான விவாதத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என திமுக கட்சியினர் கட்சியினர் இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், இந்த சட்டம் மூலம் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர் என்றும், தொழிலாளர்களின் உரிமை பாதிக்கும் எனவும் பல்வேறு எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தனர்.  இதனை தொடர்ந்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் என பலர் வெளிநடப்பு செய்தனர்.