கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் விரைந்து குணமடைய வேண்டும் என முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
ஓபிஎஸ் அவரகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் விரைந்து குணமடைய வேண்டும் என முதல்வர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘கொரோனாதொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர்செல்வம்அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node