தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி., 187 இடங்களில் உதயசூரியன் சின்னம்., திமுகவின் அதிரடி ஒப்பந்தம்.!

The DMK is contesting directly in 174 out of 234 constituencies in the Tamil Nadu Assembly elections.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிமுக – திமுக தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் குறிப்பாக வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதுமட்டுமில்லாமல் சில கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மந்தம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி கூட்டணி கட்சிகளை சேர்த்து 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, கூட்டணியில் எந்தந்த தொகுதிகள் யார் யாருக்கு ஒதுக்குவதென பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்படும். மேலும் விரைவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.