2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளது திமுக.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர்துரைமுருகன்அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளனர்.
“சட்டமன்றத் தேர்தல் – 2021: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு” – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!#DMK | #tnassembly pic.twitter.com/ycPs89A81U
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 11, 2020