ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுக – ஆர்.பி.உதயகுமார்..!

DMK is the cause of Jayalalithaa's death. I am ready to go to the Supreme Court and say this.

மதுரை குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் திமுகதான். இதை நான் உச்சநீதிமன்றம் வரை சென்று சொல்ல தயார்.

100 ஆண்டுகள் வாழக்கூடிய ஜெயலலிதாவை பொய் வழக்கு போட்டு அர்ப்ப ஆயுளில் கொன்றுவிட்டு இன்று விசாரணை கமிஷன் என்று புத்தரை போல வேஷம் போடுவதை ஒரு அதிமுக அல்ல, ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகராசி முதல்வர் மட்டுமல்ல மழைராசி முதல்வர். சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யும் பொய் பிரச்சாரங்கள் அனைத்தையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்கும் எனதெரிவித்தார்.