அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என145தடைஉத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தான். பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது. இபிஎஸ் அம்மாவுக்கு துரோகம் செய்தார், அவரை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்தார், தற்போது ஓபிஎஸ்-க்கு துரோகம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.