#BRAKING: முடிந்தது ஆலோசனை.. ரஜினியின் அடுத்த முடிவு என்ன ..?

The consultation meeting is now over as Rajini has been consulting with the executives for more than two hours.

கொரோனா தொடங்கியதில் இருந்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த சந்திப்பில், அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணியளவில் முடிந்தது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கட்சி தொடங்கினால் ஏற்படும் பாதகங்களும், கட்சி தொடங்காமல் இருந்தால் ஏற்படும் பாதகங்களும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம்  ரஜினி கருத்துக்களை ரஜினி கேட்டறிந்தார்.

அதில் அனைவருமே கட்சி தொடங்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை செய்த நிலையில் தற்போது அந்த ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது. இதனால், ரஜினியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.