விலையில்லா வேட்டி, சேவை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள்.
திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி,சேலை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கொடுத்த தரமற்ற பொங்கல் பரிசு கொருப்பினை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். எனவே, தமிழக அரசுக்கு தரமான மளிகை பொருட்களை எவ்வாறு கொள்முதல் செய்வது என்று தெரியாதபோது, மீண்டும் அந்த விஷப்பரீச்சையில் இறங்கி மக்களை இந்த வருடமும் கொடுமைப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ரொக்கமாக பணம் கொடுத்துவிடலாம்.
ஆனால் அதே சமயம் நம் நெசவாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விலையில்லா வேட்டி, சேவை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node