தேர்தல் தேதி அறிவிப்பு.. திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு..!

DMK General Secretary Duraimurugan has announced that the DMK General Committee meeting and the state conference will be postponed.

திமுக பொதுக்குழு கூட்டம், மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சில் தொடங்கி ஈடுபட்டு வருகின்றார். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை  அறிவித்தார்.

இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மார்ச் 7-ஆம் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம், திருச்சியில் மார்ச் 14-ஆம் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.