#ElectionBreaking: போடிநாயக்கனுரில் 3வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.!

O. Panneerselvam, who has filed his nomination for the third time to contest in the Bodinayakkanur Assembly constituency.

போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். போடி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக தலைமை ஆணையிட்டிருந்தது. அதனை ஏற்று இன்று நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு போடி சட்டமன்ற தொகுதியில் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி அப்பகுதி மக்கள் அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவைகளை செய்துள்ளேன்.

இரண்டு முறை என்னை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், மக்களுக்கு சேவை புரிவதே குறிக்கோளாக கொண்டு மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளேன். மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளோம். ஆகையால், மீண்டும் அம்மாவின் அதிமுக ஆட்சியை அமைய செய்வார்கள் என கூறியுள்ளார். இதனிடையே, போடிநாயகனுர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வனை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.