#ElectionBreaking: சேதுராமன் கட்சிக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு – அதிமுக

tiruchuli constituency allotted to Sethuraman's All India Muvendar Front in the AIADMK alliance.

அதிமுக கூட்டணியில் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு.

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. நேற்று 171 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. அதற்கு முன்னதாக 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சிறிய கட்சிகளுக்கு நேற்று மாலை முதல் பல்வேறு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது.

அந்தவகையில் அதிமுக கூட்டணியில் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட 5 தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கட்சி திருச்சுழி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node