உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.