#Breaking : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : அதிமுக புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்.!

அதிமுக கொடுத்த புகாரின் பெயரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வாக்காளர் பட்டியல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, ஈரோடு கிழக்கு

அதிமுக கொடுத்த புகாரின் பெயரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வாக்காளர் பட்டியல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுளளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. நாள் நெருங்க நெருங்க இடைத்தேர்தல் களநிலவரம் சூடுபிடித்து கொண்டே செல்கிறது. இதில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என மாறி மாறி மற்ற கட்சி பிரமுகர்களின் மீது தொடர் குற்றசாட்டுகளை முன்வைத்தும், தங்கள் வாக்குறுதிகளை கூறியும் வருகின்றனர்.

டெல்லியில் புகார் :அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திலும் , நீதிமன்றத்திலும் முறையிட்டு உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் , டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவகத்துக்கு ஓர் புகாரை அளித்திருந்தார். அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருபப்தாக கூறியிருந்தார்.

போலி வாக்காளர்கள் :அதில்,  40,000 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில்  கூடுதலாக இடம்பெற்றுள்ளன.எனவும், 8 ஆயிரம் பேரின் தரவுகள் இரண்டு முறை இடம் பெற்றுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை அடுத்து,  இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

புதிய உத்தரவு :தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹு , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி சிவகுமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு :இதே கூடுதல் வாக்காளர்கள் இடம் பெற்ற பட்டியல், இரட்டை வாக்காளர்கள் தரவு என  புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.