தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

Schools and colleges for 9th, 10th, 11th and 12th class students will be opened in Tamil Nadu from today.

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது.

கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல்  குறைந்ததால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9 முதல்,12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், முதலாம் ஆண்டை தவிர மற்ற கல்லுாரி மாணவர்கள் கல்லுாரியில் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.