மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்பெறும்.! ஜெயக்குமார் விமர்சனம்.!

மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்பெறும் திட்டமாக மாறப்போகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்த்துள்ளார்.

Former ADMK Minister Jayakumar

மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்பெறும் திட்டமாக மாறப்போகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்த்துள்ளார்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ருபாய் வழங்கப்படும் கலைஞர் உரிமை தொகை திட்டம் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உரிய பயனாளர்களை கண்டறியும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் பயனர்களை கண்டறிய இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

இது குறித்து நேற்று மயிலாடுதுறை தரங்கம்பாடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மகளிர் உரிமை தொகை திட்டமானது திமுகவினருக்கு பயன்படும் திட்டமாக மாறப்போகிறது. இதில் தன்னார்வலர்கள் பயனபடுத்தப்பட உள்ளனர் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்தார்.