ஆளுநரின் தேநீர் விருந்து – எந்தெந்த கட்சிகள் கலந்து கொண்டுள்ளது தெரியுமா..?

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளது.  நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை,  வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டுள்ளனர்.