தேமுதிகவில் நடக்கும் எதுவும் அவருக்கு தெரியாது – திமுகவில் இணைந்த மதிவாணன் பேட்டி

North Chennai DMDK District Secretary Mathivanan joined the DMK in the presence of DMK leader MK Stalin at the Anna Arivalayam in Chennai.

வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் ,சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள காட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.ஒரு சிலர் தாங்கள் இருக்கின்ற கட்சியிலே பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறி மாற்று கட்சிக்கு செல்கின்றனர்.இந்நிலையில் வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர்மதிவாணன்இன்று திமுகவில் இணைந்தார் .சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,தேமுதிக கட்சி  விஜயகாந்த் கையில் இல்லாததே கட்சியை விட்டு வெளியேற காரணம் .தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவருக்கு தெரியாது.41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.